• October 7, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்​களூரு​வில் உள்ள பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் கைதி​கள் விதி​முறை​களை மீறி வரு​வது தொடர்​கதை​யாக உள்​ளது. சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட போது சசிகலா சீருடை அணி​யாமல், வெளியே ஷாப்​பிங் சென்ற வீடியோ வெளி​யானது. கர்​நாடக முன்​னாள் அமைச்​சர் ஜனார்த்தன ரெட்​டி, நடிகர் தர்​ஷன் ஆகியோ​ரும், ரவுடிகளும் சிறை​யில் சொகு​சாக இருப்​பது போன்ற வீடியோக்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இந்​நிலை​யில் கொலை வழக்​கில் கைதாகி சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள பிரபல ரவுடி சீனி​வாஸ் சில தினங்​களுக்கு முன்பு தனது பிறந்​த​நாளை ஆப்​பிள் மாலை அணிந்​து, கேக் வெட்டி நண்​பர்​கள் புடைசூழ கொண்​டாடி​யுள்​ளார். மேலும் அவர் செல்​போனில் நண்​பர்​களு​டன் வீடியோ காலில் பேசுவது போன்ற வீடியோக்​களும் சமூக வலைத்​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *