
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு நேற்று முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப் பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று முன்தினம் வரை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான நீர் தேவை குறைந்தது.