• October 7, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் டார்​ஜிலிங் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் கடந்த 3 நாட்​களாக கனமழை பெய்து வரு​கிறது. இதனால் ஏற்பட்ட நிலச்​சரிவு, பாலம் இடிந்து விழுந்த சம்​பவங்களில் சிக்கி உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 27-ஆக உயர்ந்​துள்​ளது.

இந்​நிலை​யில் டார்​ஜிலிங் அரு​கில் உள்ள நக்​ரகட்டா பகு​தி​யில் வெள்ள பாதிப்பை பார்​வை​யிட அம்மாநில பாஜக எம்பி கஜேன் முர்மு நேற்று காலை சென்​றார். அப்​போது அங்கு கூடி​யிருந்த மக்​கள், காரிலிருந்து இறங்​கிய எம்​.பி. கஜேன் முர்மு மீது கல்​வீசி தாக்​கினர். இதில் அவரது தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்​பட்டு ரத்​தம் கொட்​டிய​து. இதைத் தொடர்ந்து அவர் மருத்​து​வ​மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *