
நம் அன்றாட உணவுகளில் கீரை, தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக இருந்து வருகிறது. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளை வழங்குவதால், மருத்துவர்கள் முதல் உணவியல் துறை வல்லுநர்கள் வரை கீரையைக் கட்டாயம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். தற்போது, சந்தைகளில் பெரும்பாலும் ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் கீரைகளே விற்பனை செய்யப்படுகின்றன. இயற்கை விவசாய முறையில் கீரைகளை உற்பத்தி செய்யும் வகையில் பசுமை விகடன் மற்றும் விருக்ஷம் ஆர்கானிக் ஃபார்ம் இணைந்து ‘லாபம் தரும் கீரை சாகுபடி’ என்ற பயிற்சியை நடத்த உள்ளது. வருகிற அக்டோபர் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, தாம்பரம் அடுத்த புஷ்பகிரியில் உள்ள விருக்ஷம் ஆர்கானிக் ஃபார்மில் நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சியில் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து விருக்ஷம் ஆர்கானிக் ஃபார்மை நடத்தி வரும் இயற்கை விவசாயி ஜனாவிடம் பேசியபோது, “12 வகையான கீரையில பயிர் செஞ்சுட்டு வர்றோம். அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, சிவப்பு முளைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் கீரை, புளிச்சக்கீரை, புதினா, கொத்தமல்லி, பொன்னாங்கண்ணி (பச்சை, சிவப்பு), மணத்தக்காளி, வல்லாரைக் கீரைனு பயிர் செஞ்சுட்டு இருக்கோம். நாலு, நாலு மேட்டுப்பாத்திகளாக (பெட்) பிரிச்சு, அதுல கீரையை பயிர் செய்றோம். ஒரு பாத்தியில் அறுவடை முடிந்தால், அடுத்த வாரம் இன்னொரு பாத்தி அறுவடைக்குத் தயாராக இருக்கும் வகையில விதைப்போம். மழைக்காலங்கள்ல பொன்னாங்கண்ணி, புதினா, புளிச்சக்கீரை, அரைக்கீரைனு பயிர் செய்வோம்.
கீரை சாகுபடியோடு காய்கறிகளையும் பயிர் செய்கிறோம். கீரை சாகுபடி செய்ய மேட்டுப்பாத்தி எப்படி அமைக்க வேண்டும், அதில் விதைகளை எப்படி விதைக்க வேண்டும், பாசனம் எப்படி செய்ய வேண்டும், தினந்தோறும் கீரை அறுவடை செய்வது எப்படி, சுழற்சி முறையில் கீரையை எப்படி அறுவடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை, இந்தக் கீரை சாகுபடி பயிற்சியில் கற்றுத் தர இருக்கிறோம். 10 சென்ட்டில் கீரை விதைத்தால்கூட வாரம் 10,000 ரூபாய் வருமானம் பார்க்கலாம். அதற்கான வழிகாட்டல்களை இந்தப் பயிற்சியில் வழங்க இருக்கிறோம். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், எரு போன்ற இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தியே எப்படி கீரை விவசாயத்தை வெற்றிக்கரமாகச் செய்யலாம் என்பது குறித்து வழிகாட்ட இருக்கிறோம். கீரைக்கான விற்பனை வாய்ப்புகள் குறித்தும் வழிகாட்ட இருக்கிறோம்” என்றார்.
கீரையில் எத்தனை வகைகள் இருக்கின்றன, ஒவ்வொரு கீரையின் சிறப்புகள் என்ன, வீட்டுத்தோட்டத்தில் கீரை சாகுபடி செய்வதற்கான வழிகாட்டல்கள், கீரையில் மதிப்புக்கூட்டுவதற்கான வழிகாட்டல்களை வழங்க இருக்கிறார் சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த கீரை விவசாயி ருத்ரன்.
கீரையில் தாக்கும் பூச்சிகள், அவற்றைத் தடுப்பதற்கான வழிகள், கீரையிலிருந்து விதைகளைப் பிரித்தெடுக்கும் நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்க இருக்கிறார் உத்திரமேரூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி பரத்.

கீரை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, இந்தப் பயிற்சி ஒரு முக்கிய வழிகாட்டலாக இருக்கும்.
நாள்: 12.10.2025, ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம்: விருக்ஷம் ஆர்கானிக் ஃபார்ம், புஷ்பகிரி, தாம்பரம்-ஶ்ரீபெரும்புதூர் சாலை (தாம்பரத்திலிருந்து முடிச்சூர் வழியாக 10 கி.மீ).
சிறப்பம்சங்கள்:
கீரை ரகங்களும் அவற்றின் சிறப்புகளும்.
பாத்தி மற்றும் மேட்டுப்பாத்தியில் கீரை விதைப்பதற்கான முறைகள்.
வீட்டுத்தோட்டத்தில் கீரை வளர்ப்பதற்கான வழிகாட்டல்கள்.
பாசனம் மற்றும் இயற்கை இடுபொருள்கள் கொடுக்கும் முறைகள்.
பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களைக் கண்டறியும் முறைகள்.
கீரையை அறுவடை செய்யும் நுட்பங்கள்.
கீரைக்கான விற்பனை வாய்ப்புகள்.
கீரை சூப் மற்றும் கீரையில் மதிப்புக்கூட்டல் குறித்த வழிகாட்டல்கள்.

இன்னும் இன்னும்…
பயிற்சிக் கட்டணம் ரூ.600
பயிற்சியில் நோட்பேட், பேனா, தேநீர், மதிய உணவு வழங்கப்படும்.
கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளவும். கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பே.டி.எம்… போன்ற UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.
க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும் அல்லது
UPI Id: vikatanmedia17590@icici யிலும் கட்டணம் செலுத்தலாம்.

கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் உங்கள் முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பவும்.
நிகழ்வில் நாட்டுக் காய்கறி மற்றும் கீரை விதைகள், இயற்கை விவசாய கீரைகள், காய்கறிகள் உள்ளிட்டவை கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு: 99400 22128