
குமுளி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஐயப்பனை தரிசிப்பதற்காக அக். 22-ம் தேதி சபரிமலை வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 18-ம் தேதி துலாம் மாத (ஐப்பசி) பிறப்பை முன்னிட்டு வரும் 17-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது.
ஐப்பசி மாத வழிபாட்டில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு ஐயப்பனை தரிசிக்க உள்ளார். இவர் ஏற்கெனவே மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்த நிலையில், பம்பை, சந்நிதானம் உள்ளிட்ட பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அப்போது நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போர்சூழலால் அவர் சபரிமலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.