• October 6, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரும், பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் போட்டியாளராக இருந்தவருமான கூல் சுரேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பலமுறை விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இன்று சென்னையில் குடும்ப அட்டைப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “2026-ல் யார் முதல்வரானாலும் கூல் சுரேஷ் முதல்வரானாலும் முதலில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். சமூகத்தில் மாபெரும் சீர் கேட்டை ஏற்படுத்துகிறது.

கூல் சுரேஷ்

இரவு 11 மணி காட்சி போல பிக் பாஸ் மாறிவிட்டது. நான் ஏன் பிக் பாஸ் சென்றேன் என இப்போது வெட்கப்படுகிறேன். அரைகுறை ஆடையுடன் வெளியே சொல்வதற்கே வெட்கக்கேடு.

இரட்டை அர்த்த வசனம் பேசும் பெண்கள், கோமாளித்தனமாக இருப்பவர்கள், திமிராக இருப்பவர்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். இப்போது வந்திருக்கும் 20 பேரில் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தப் பெண், நடனமாடும் பெண் என இருவர் கடைசிவரை வருவார்கள் எனக் கருதுகிறேன். திறமையை வெளிப்படுத்த வந்து, அடையாளத்தை துறக்கிறார்கள்”

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *