• October 6, 2025
  • NewsEditor
  • 0

இந்த மாதம் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை. திங்கள் கிழமை தீபாவளி என்பதால் அதற்கு முந்தைய சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை என தொடர் விடுமுறையாக அமைந்திருக்கிறது. வழக்கம்போல சென்னையிலிருந்து பல லட்சம் மக்கள் ஒரே சமயத்தில் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

இந்நிலையில் அத்தனைபேருக்கும் பேருந்து வசதிகள் ஏற்பாடுகள் செய்ய ஆண்டுதோறும் தமிழக அரசு எப்போது சிறப்பு பேருந்துகளை அறிவிக்கும். அவ்வகையில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலான 4 நாட்கள் இயக்கப்படும்.

`தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னையில் இருந்து மட்டும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு 14,268 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதற்காக 15,129 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையை தவிர்த்து பிற ஊர்களில் இருந்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக 6,110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இதுவரை 2 லட்சம் பேர் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.” என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் சிவசங்கர்

“கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன” என்றும் “ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் வழக்கம்போல எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

மேலும், “மக்கள் பேருந்துகளில் பட்டாசுகளை எடுத்துச் செல்வது பேராபத்து. பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் கண்டறியப்பட்டால் உடனே பேருந்தில் இருந்து இறக்கிவிடப்படுவர்” என்று அறிவுறித்தியிருக்கிறார்.

பேருந்து நிலையங்கள்

கிளாம்பாக்கம் (KCBT) – புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு: ECR, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர், திருத்தணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்

மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *