
பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று (அக்.5) தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.
சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (அக்.6) வெளியாகி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோவில் திவாகருக்கும், பிரவீன் தேவசகாயத்துக்கும் வாக்குவாதம் நடக்கும்போது கெமி உள்ளே வருகிறார். பிறகு அப்படியே அந்த வாக்குவாதம் திவாகருக்கும், கெமிக்கும் மாறுகிறது. புரொமோவை பார்க்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.