
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கவாய் பதவி வகித்து வருகிறார். இன்று அவர் வழக்கு விசாரணை செய்துகொண்டிருக்கும்போது வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயன்றிருக்கிறார்.
அந்த வழக்கறிஞர் கவாய் இருக்கைக்கு அருகே சென்று காலணியை வீசி தாக்க முயன்றிருக்கிறார்.
பின்னர் அந்த வழக்கறிஞரை சுப்ரீம் கோர்ட்டில் இருந்த பாதுகாவலர்கள் வெளியேற்றி இருக்கிறார்கள்.
“சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என அந்த வழக்கறிஞர் கூச்சலிட்டிருக்கிறார்.
“கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது. அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான்” என்று எந்த பரபரப்பும் இல்லாமல் வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய்.