• October 6, 2025
  • NewsEditor
  • 0

பீகாரில் அடுத்த ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அவசர அவசரமாக நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகின்றன.

பீகார் அரசு பெண்களுக்கு ஏற்கெனவே அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் போட்டுள்ளது. மத்திய அரசின் நிதியில் ஐ.டி.ஐ.யில் திறனாய்வு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஆன்லைனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதில் ஆன்லைன் மூலம் மாநில முதல்வர் நிதீஷ் குமாரும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், நிகழ்ச்சி விவரங்களை ஒரு தலைவர் படித்துக்கொண்டிருந்தார்.

ஆன்லைன் விழாவில் நிதீஷ் குமார்

அந்நேரம் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மிகவும் பவ்யமாக இருக்கையில் அமர்ந்து கையெடுத்துக் கும்பிட்டபடி இருந்தார். அவர் ஒரு முறை கும்பிட்டவுடன் கையை எடுக்கவில்லை. தொடர்ந்து அப்படியே கும்பிட்டபடி இருந்தார்.

கும்பிட்டபடி அடிக்கடி கையே மேலேயும் கீழேயும் லேசாக அசைத்துக்கொண்டிருந்தார். அப்படியே நிதீஷ் குமார் பக்கத்தில் அடிக்கடி பார்த்தார். ஒரு நிமிடம் வரை கையெடுத்து கும்பிட்டபடி இருந்தார்.

அவரது இந்த செயலை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. சமீபத்திய நிதீஷ் குமாரின் செயல்பாடுகள் சர்ச்சையை கிளப்பும் வகையில் இருந்து வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் பாட்னாவில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சி முடிந்து தேசியக்கீதம் பாடப்பட்ட போது நிதீஷ் குமார் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தார். அவரது முதன்மை செயலாளர் தீபக் குமார்தான் முதல்வர் நிதீஷ் குமாரை உஷார்படுத்தினார்.

அதோடு தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்தபோது நிதீஷ் குமார் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் கைகுலுக்கினார்.

அதிகாரி தலையில் மரக்கன்றை நட்ட நிதீஷ் குமார்
அதிகாரி தலையில் மரக்கன்றை நட்ட நிதீஷ் குமார்

இதே போன்று பாட்னாவில் நடந்த மத்திய மாநில திட்ட தொடக்க விழாவில் பெண் ஒருவரின் தோளில் நிதீஷ் குமார் கைபோட்டார். அவரது இச்செயல்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளபோதிலும், பா.ஜ.க அவரது செயலை நியாயப்படுத்தி இருக்கிறது.

அதோடு நிதீஷ்குமாரின் உடல்நிலை குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றன. கடந்த மே மாதம் பாட்னாவில் நடந்த மரம் நடும் விழாவில் நிதீஷ் குமார் அதிகாரி ஒருவரின் தலையில் மரக்கன்றை நட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *