
டார்ஜிலிங்: கனமழை, வெள்ளம், நிலச் சரிவு காரணமாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான பலரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார் ஜிலிங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இங்குள்ள கலிம் போங், கூச் பெஹார், ஜல்பைகுரி, அலிப்பூர்துவார் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள் ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனிடையே, டார்ஜிலிங் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல் வேறு இடங்களில் நேற்று முன் தினம் இரவு நிலச்சரிவு ஏற் பட்டது.