
பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.
வருடந்தோறும் பிக் பாஸ் வீட்டை மாற்றியமைப்பதுபோல, இந்த வருடத்தின் வீட்டையும் எகிப்திய அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக அமைத்திருக்கிறார்கள்.
சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் என பலரும் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்
வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்கள் யார்? அவர்களைப் பற்றிய விவரத்தை இங்கு பார்ப்போம்.
கெமி:
தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தவர், ‘குக் வித் கோமாளி’யில் போட்டியாளராகக் கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சிங்கிள் பசங்க’ என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார். மாடலிங் மற்றும் தொலைக்காட்சி மூலமே அடையாளம் பெற்ற கெமியின் இன்னொறு பக்கம், அவர் ஒரு கூடைப்பந்து வீராங்கனை. இந்திய அளவில் நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டிகளில் தான் கலந்துகொண்டு பரிசுகள் வென்றிருப்பதாகவும் பிக்பாஸ் மேடையில் பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டார். ‘அரசியல் சூழ்ச்சியால்’ தான் கூடைப்பந்து விளையாட்டைத் தொடர முடியாமல் போனதாகவும் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
Bigg Boss Tamil Season 9 #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason9 #TuneInNow #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/neH8q4HrAr
— Vijay Television (@vijaytelevision) October 5, 2025
ஆதிரை சௌந்தரராஜன்:
மாடலிங் துறையில் பணியாற்றியவர். நடிகர் ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’ படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். விஜய்யின் ‘பிகில்’ படத்தில் நடித்து அடுத்து அடியை எடுத்து வைத்தார். இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
ரம்யா ஜோ:
ஆதரவற்றோர் இல்லத்தில் தனது சகோதரிகளுடன் வளர்ந்தவர் ரம்யா ஜோ மைசூரில் பிறந்து தஞ்சாவூரில் வசித்து வரும் இவர், பொருளாதார நிலையை சமாளிக்க ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் நடனமாடத் தொடங்கினார். அதில் பல பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டதாக வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். சினிமா கனவோடு இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்
#பிக்பாஸ் இல்லத்தில்.. #RamyaJoo
Bigg Boss Tamil Season 9 #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason9 #TuneInNow #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/QJjwr50Gb3
— Vijay Television (@vijaytelevision) October 5, 2025
கமருதீன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சிலவற்றிலிருந்து யாராவது பிக் பாஸ் செல்வது வழக்கமாக நடப்பதுதான். இந்த சீசனில் அப்படிசெல்கிறவர்களின் எண்ணிக்கையைக் கொஞ்சம் குறைத்திருப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும் `மகாநதி’ தொடரில் நடித்து வந்த நடிகர் கமருதீன் பிக்பாஸ் போட்டியாளராகச் சென்றிருக்கிறார்