• October 6, 2025
  • NewsEditor
  • 0

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

பிக் பாஸ்

வீட்டிற்குள் சென்றிருக்கும் போட்டியாளர்கள் பற்றிய விவரத்தை இங்கு பார்ப்போம்.

சுபிக்‌ஷா குமார்:

தூத்துக்குடி மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் சுபிக்‌ஷா குமார். மீனவரான இவரது அப்பாவுடன் சேர்ந்து அந்த ஊரிலேயே தைரியமாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். அப்பாவுக்கு ஆதரவாக உதவியாக எப்போதும் இருப்பதாகக் கூறுகிறார். யூடியூப்பிலும் தனது உழைப்பால் பிரபலமாகி அடையாளம் பெற்றவர். இப்போது இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

அப்சரா சிஜே:

கேரளாவைச் சேர்ந்த திருநங்கையான இவர், மாடலாக பல பேஷன் ஷோக்களில் ரேம்ப் வாக் செய்திருக்கிறார். புகைப்படக் கலையிலும் ஆர்வம் கொண்டவர். இப்போது சினிமா கனவோடு பிக் பாஸில் களமிறங்கியிருக்கிறார்.

விக்கல்ஸ் விக்ரம்:

விக்கல்ஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் திரை இசைப் பாடல்களை வைத்து நகைச்சுவை செய்து ரஹ்மான் வரை அறியப்பட்டு பிரபலமானவர். ஸ்டண்ட் அப் காமெடியிலும் பல ஷோக்கள் செய்திருக்கிறார். தந்தூரி இட்லி, வேற மாரி ஆபிஸ், வேற மாரி டிரிப் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரிஸ்களில் நடித்து சினிமா வரை சென்றிருக்கும் இவர், இப்போது தனது பிரபலத்தை இன்னும் விசாலமாக்க பிக்பாஸ் வந்திருக்கிறார்.

கலையரசன்:

அகோரி கலையரசனாக பல சர்ச்சைக்குள் சிக்கியவர். இந்த 25 வயதில் காசி வரை சென்று வாழ்க்கையில் எல்லைக்குச் சென்றவர், சாமி வாக்கு சொல்பவராக சர்ச்சைகளில் சிக்கித் தவித்தவர். இப்போது எல்லாத்தையும் விட்டுவிட்டு குடும்பத்திற்காக குழந்தைக்காக தனது வாழ்வை மீண்டும் புதிதாக தொடங்கியிருப்பவர், பிக் பாஸ் மூலம் தன் அடையாளத்தை நல்ல முறையில் மாற்றி முன்னேற வந்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *