
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘டியூட்’. சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் கதை சொன்னேன். அவர்களுக்கு பிடித்துப் போனதால் உடனே பட வேலைகளைத் தொடங்கினோம். முதல் படத்தின் கதையை எழுதும்போது யார் நடிப்பார்கள் என்பது தெரியாது. நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதனால் படைப்பு சுதந்திர அடிப்படையில், ரஜினி சாருக்கு இப்போது 30 வயது இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து இந்தக் கதையை உருவாக்கினேன். அதில் பிரதீப் ரங்கநாதன் பொருந்திப் போயிருக்கிறார்.