• October 6, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழகம், புதுச்​சேரி​யில் உள்ள மாவட்ட நீதி​மன்​றங்​களில் அனைத்து வழக்​கு​களை​யும் அக்​டோபர் 8 முதல் இணை​ய​வழியில் தாக்​கல் செய்​வதை கட்​டாயப்​படுத்​தி, உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. உயர் நீதி​மன்​றம் மற்​றும் மாவட்ட நீதிமன்றங்களில் காகிதப் பயன்​பாட்டை குறைக்க இணை​ய​வழி மனு தாக்​கல் முறை ஓராண்​டுக்கு முன்பு அறி​முகம் செய்யப்பட்டது.

இம்​முறை​யில் வழக்கு தொடர்​பான மனுக்​கள் மற்​றும் ஆவணங்​களை ஸ்கேன் செய்​து, நீதி​மன்ற வலைதள முகவரி​யில் பதிவேற்றம் செய்து அனுப்​பவேண்​டும். இந்த முறையை பின்​பற்​று​வ​தில் சில சிரமங்​கள் எழுந்​த​தால், உயர் நீதி​மன்​றத்​தில் இணை​ய​வழி மனு தாக்​கல் நிறுத்தி வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் உள்ள அனைத்து மாவட்ட நீதி​மன்​றங்​களில் உள்ள அனைத்து வழக்​கு​களை​யும் அக். 8 முதல் இணை​ய​வழி​யில் தாக்​கல் செய்​வதை கட்​டாய​மாக்கி உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *