
இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது.
நடந்து முடிந்த ஆண்களுக்கான ஆசியக் கோப்பையில் இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியின்போது கேப்டன்கள் கை கொடுத்துக்கொள்ளாததைப் போலவே இன்றும் டாஸின்போது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா கை குலுக்கிக்கொள்ளாமல் பிரிந்தனர். பாகிஸ்தான் டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வுசெய்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதல், அதைத்தொடர்ந்த ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கை குலுக்காமல் செல்வது தொடர்கிறது.
ஒருபடி மேலாக சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் அமைச்சரின் கைகளால் ஆசியக் கோப்பையை வாங்க மறுத்தார். இன்றுவரை கோப்பை இந்திய அணியிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.
இன்றைய இந்திய அணியின் பிளேயிங் 11-ல் முன்னணி ஆல் ரவுண்டர் அமன்ஜோத் கவுர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
IND vs PAK – மகளிர் உலகக்கோப்பை

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 247 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகினர்.
ஆட்டத்துக்கு நடுவே பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் மைதானத்துக்குள் புகைபோடும் இயந்திரத்தின் மூலம் பூச்சிகளை விரட்டினர். இதற்காக போட்டியை 10 நிமிடத்துக்கும் மேலாக நிறுத்தி வைத்தனர்.
248 ரன்களை சேஸ் செய்யும் மிக மிக மெதுவான தொடக்கத்தைக் கொடுத்துள்ளனர். முதல் 15 ஓவர் முடிவில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.
இந்திய வெற்றிபெறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.