• October 5, 2025
  • NewsEditor
  • 0

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக இன்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

வருடந்தோறும் பிக் பாஸ் வீட்டை மாற்றியமைப்பது போல, இந்த வருடத்தின் வீட்டையும் வித்தியாசமாக அமைத்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9

போட்டியாளர் ஒவ்வொருவராக வீட்டிற்குள் சென்று கொண்டிருக்கிறார்கள். சோசியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூட்யூபர்கள் என பலரும் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து வருகிறார்கள்.

வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர் யார்? அவர்களைப் பற்றிய விவரத்தை இங்கு பார்ப்போம்.

துஷார் ஜெயபிரகாஷ்:

கன்டென்ட் கிரியேட்டரான துஷார் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்து தனது உருவத்திற்காக நிராகரிப்புகளைச் சந்தித்ததாகவும் இவர் சொல்லியிருக்கிறார். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவரும் இந்த சீசனில் என்ட்ரி தந்திருக்கிறார்.

கனி
கனி

கனி:

இயக்குநர் அகத்தியனின் மகளான கனி இதற்கு முன்பே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வந்தவர். இயக்குநர் அகத்தியனின் மகள் என்பது பலரும் அறிந்ததே. ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘நான் சிகப்பு மனிதன்’ போன்ற படங்களை இயக்கிய திரு தான் கனியின் கணவர். இந்த ஆண்டு ஹாட்ஸ்டாரில் வந்திருந்த ‘பாராசூட்’ வெப் சீரிஸிலும் இவர் நடித்திருக்கிறார்.

சபரிநாதன்:

சீரியல் நடிகரான சபரிநாதனும் இந்த வருட பிக் பாஸில் பங்கேற்றிருக்கிறார். கடந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியாளர்களை இவர் நேர்காணல் செய்த ரகளைகள் இணையத்தில் பெரும் வைரலாகின. ‘வேலைக்காரன்’, ‘பொன்னி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழ் மக்களுக்கு பரிச்சயமான சபரி. கலகலப்பான தொகுப்பாளரும்கூட.

பிரவீன் காந்தி:

‘ரட்சகன்’, ‘ஜோடி’ உள்ளிட்ட 90ஸ் கிட்ஸுக்கு பேவரிட்டான திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பிரவீன் காந்தி. அப்படங்களைத் தொடர்ந்து ‘துள்ளல்’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார் பிரவீன் காந்தி. ஆனால், அப்படம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. 2007-க்குப் பிறகு இவர் டைரக்ஷன் பக்கம் வரவில்லை. கவ்பாய் தொப்பி, ஒரு கண்ணாடிதான் பிரவீன் காந்தியின் அடையாளம். சீனியராக இவரும் இந்த வருடம் பிக் பாஸில் என்ட்ரி தந்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *