• October 5, 2025
  • NewsEditor
  • 0

1980-90-களின் நடிகர்கள் வருடந்தோறும் ஒன்றுகூடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு ராஜ்குமார் சேதுபதி – ஸ்ரீபிரியா இல்லத்தில் இந்த ஒன்று கூடுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளை சேர்ந்த 31 நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

‘ஒன்றாகப் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்கள் மீண்டும் கூடுவது போல 1980-கள் மற்றும் 90-களில் இந்திய திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு முறை சந்தித்து நட்பை வலுவாக்கி, நினைவுகளை உயிர்ப்பித்து வருகின்றனர். கனமழை காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு 80-ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன் நடந்தேறியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *