
சென்னை: “தமிழ்நாடு யாருடன் போராடும்? என ஆளுநர் கேட்டுள்ளார். இந்தி மொழியை ஏற்றால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்” என ஆளுநர் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
வள்ளலாரின் பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்’ என அடிக்கடி கூறிவரும் நிலையில், தமிழ்நாடு யாருடன் போராடும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.