
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் அக்.14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் அக்.13-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றன.