
சிரஞ்சீவி ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இவர் இதற்கு முன், 'பகவந்த்கேசரி', 'சங்கராந்திக்கு வஸ்துனாம்' உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். இப்போது இயக்கும் படத்துக்கு 'மன சங்கர வரபிரசாத் காரு' என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில் சசிரேகாவாக நடிக்கும் நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ வில்லனாக நடிக்க இருக்கிறார். இவர் தமிழில் பீஸ்ட், குட் பேட் அக்லி படங்களில் நடித்துள்ளார். இந்தப் படம் 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.