• October 5, 2025
  • NewsEditor
  • 0

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,

“41 பேர் உயிரிழப்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட்டுவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். ஆனால், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதியரசர் செந்தில்குமார் என்ன கூறினார் என்று அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து தமிழ்நாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைகுனிய விடவில்லை என்பது தெரிகிறது.

minister ragupathi

தமிழ்நாட்டை தலைகுனிய விட்டவர்கள் யார் என்பதை நீதிபதி கூறிய வார்த்தைகளில் இருந்து தெரியும். சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்று தமிழ்நாட்டில் இடம் கிடைக்காத பா.ஜ.க யாராவது ஆள் கிடைப்பார்களா என்று பார்த்தார்கள். நிச்சயமாக அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது. விஜய்க்கு பா.ஜ.க-வினர் ஆதரவு குறித்த கேள்விக்கு நான் ஏற்கெனவே கூறியதைப்போல் பா.ஜ.க-வின் C டீம் தான் விஜய். இதை நான் தான் முதல் முதலில் கூறியது. நீதிபதியை விமர்சனம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்வார்கள். யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் அனாவசியமாக கைது செய்ய வேண்டியதில்லை/ சட்டம் தன் கடமையை செய்யும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *