• October 5, 2025
  • NewsEditor
  • 0

திரையுலகில் பல ஆண்டுகளாக மெகாஸ்டாராக வலம் வரும் நடிகர் மம்மூட்டியை சந்தித்த நடிகரும், இயக்குநருமான பாசில் ஜோசப் தனது அனுபவம் குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த சந்திப்பின்போது மம்மூட்டியின் எளிமையான குணம் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் நெகிழ வைத்ததாக பாசில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மறக்க முடியாத மாலைப்பொழுது

பாசில் ஜோசப் பதிவின்படி, “ஒரு லெஜண்டுடன் மாலைப் பொழுதைக் கழிக்கும் அரிதான பாக்கியம் கிடைத்தது. அது மிகவும் நெகிழ்ச்சியான தருணம். எங்கள் குடும்பம் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் ஒரு பொக்கிஷம் அது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பின்போது, அவரின் மகள் மம்மூட்டியைப் பார்த்து வெகுளித்தனமாக, “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டுள்ளார். அதற்கு மம்மூட்டி புன்னகையுடன் “மம்மூட்டி” என்று எளிமையாக பதிலளித்துள்ளார். அந்தப் பணிவான பதில் தங்கள் இதயத்தில் வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் ஒரு முக்கிய நினைவாக பதிந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மம்மூட்டி தனது கேமராவில் புகைப்படங்கள் எடுத்தார். குடும்பத்துடன் ஏராளமான செல்ஃபிக்களைக் கிளிக் செய்தார். சில மணிநேரங்களுக்கு, அவர் இந்த உலகிற்கு யார் என்பதை எங்களை மறக்கச் செய்து, ஒரு நெருங்கிய நண்பருடன் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினார்.

அந்த வகையான கருணையும், அரவணைப்பும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என்று பாசில் தனது பதிவில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த போஸ்ட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/share/1ZGnTU5HKj/

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *