
புதுடெல்லி: மணிக்கு 7,400 கிமீ வேகத்தில் சீறிப் பாயும் த்வனி ஏவுகணை டிசம்பரில் சோதனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகியவை முன்னோடிகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.