
சென்னை: ‘தவெக தலைவர் விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிலர் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்’ என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் அமைகின்றன. இதனால், தென் மாவட்டங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல், வாழ்வாதாரம் பாதிக் கப்படுகிறார்கள். இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க தொடர்ந்து குரல்
கொடுத்து வந்தோம். தற்போது, தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள கார் கம்பெனிகளில் 300-க்கும் மேற்பட்டோர் வேலையில் அமர்ந்துள்ளனர். ஆனால், இந்த வேலையில் உள்ளூர் வாசிகள் மிகக் குறைவு.