• October 5, 2025
  • NewsEditor
  • 0

பரேலி: உத்​தரபிரதேசம், கான்​பூர் மாவட்​டம் ராவத்​பூரில், கடந்த மாதம் 4-ம் தேதி மிலாடி நபி பண்​டிகை​யையொட்டி நடை​பெற்ற ஊர்​வலத்​தில் 'ஐ லவ் முகமது' என்ற வாசகம் தாங்​கிய பேனர்​களை​யும் கொண்டு சென்​றனர். இதற்கு இந்​துக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இது தொடர்​பாக செப்டம்பர் 26-ம் தேதி இருதரப்​பினர் இடையே மோதல் ஏற்​பட்டு கலவர​மாக மாறியது.

இந்​நிலை​யில், பரேலி நகரில் டாக்​டர் நபீஸ் அகமதுக்கு சொந்​த​மான ராஸா பேலஸ் என்ற திரு​மணம் மண்​டபத்தை மாவட்ட வளர்ச்சி ஆணைய அதி​காரி​கள் போலீ​ஸாரின் உதவி​யுடன் நேற்று இடித்​தனர். கட்​டு​மான விதி​கள் மீறப்​பட்​டுள்​ள​தால் அந்​தக் கட்​டிடத்தை இடித்​த​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *