
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (81). காய்ச்சல், சளி, இருமல் பிரச்சினை ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். வைகோ நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.