• October 4, 2025
  • NewsEditor
  • 0

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள், மரங்களின் மாநாடுகளை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு, தஞ்சையில் தண்ணீரின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு நடத்தப்போவதாகத் திட்டமிட்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்துவதற்காக இடத்தைப் பார்வையிட்டார். இதற்காக படகு மூலம் நடுக்கடலுக்குச் சென்று ஆய்வும் செய்தார்.

முதல்வர் ஸ்டாலின் – நடிகர் விஜய்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து கரூர் சம்பவம் குறித்து பேசிய சீமான், “அரசியல் கட்சி பிரசாரங்கள், மாநாடுகள் நடத்துவதை இன்னும் கொஞ்சம் ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கு. தனியாக இடத்தைப் பிடித்து கூட்டம் நடத்தலாம். மக்கள் இருக்கும் தெருக்களில், சாலைகளில் பிரசாரங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

இல்லையென்றால் வெளிநாடுகளில் இருப்பதுபோல எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நேரம் ஒதுக்கி, மீடியா மூலம் பேசி மக்களிடம் பரப்புரை செய்யலாம். இப்போது இருக்கும் நடைமுறையால் நேரம், பணம் விரையமாகிறது, மக்களுக்கும் இடையூறாகவும் இருக்கிறது.

சீமான்

கரூர் சம்பவம் குறித்து ஆய்வு செய்ய வந்த பாஜக எம்.பி குழு விஜய்க்கு ஆதரவாகவே நிலைபாடு எடுக்கிறது. பாஜக விஜய்யை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது.

கூட்ட நெரிசல் அசாம்பாவிதத்தில் விஜய் மீதும் தவறு இருக்கிறது, அரசின் மீதும் தவறு இருக்கிறது. விஜய் தன்மீது எந்தத் தவறும் இல்லை என்று பொறுப்பில்லாமல் பேசுவது தவறு. ஒருவரை ஒருவர் மாறி மாறி பழிபோட்டு அரசியல் செய்வது சரியல்ல” என்று பேசியிருக்கிறார் சிமான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *