
சென்னை: திமுக எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த ஓராண்டாகவே மின்னஞ்சல் மூலம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், முதல்வர், அமைச்சர்களின் வீடு, ஆளுநர் மாளிகை என பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.