
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் ப்ரோமோ வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் ப்ரோமோ இன்று (அக்டோபர் 4) வெளியாவதாக இருந்தது. இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் தாணு, “சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க சிம்பு மற்றும் வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைதளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.