
விஜய் டிவியின் ஹிட் ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் ஷூட்டிங் இன்று காலை தொடங்கியது.
2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டிவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை எட்டு சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளன. ஏழாவது சீசன் வரை நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் கடந்த சீசனில் அந்த வேலையை விஜய் சேதுபதி செய்தார். தொடர்ந்து இந்த சீசனையும் அவரே தொகுத்து வழங்கவிருக்கிறார்.
நாளை ஒளிபரப்பு தொடங்கவிருக்கிற சூழலில் நேற்று இரவே போட்டியாளர்கள் சென்னை பூந்தமல்லி ஈ வி பி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக இந்த சீசனில் கலந்து கொள்ளும் வாட்டர்மெலன் திவாகர், இயக்குநர் பிரவீன் காந்தி உள்ளிட்ட சில போட்டியாளர்களின் பெயர்களை ஏற்கெனவே நாம் வெளியிட்டிருந்தோம்.
தற்போது இறுதி நேரத்தில் நிகழ்ச்சிக்குள் நுழைந்த மேலும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. யார் யார் பார்க்கலாமா?
வி.ஜே. பார்வதி
ஆங்கரிங், சீரியல், சினிமா என ரவுண்ட் வரும் வி.ஜே. பார்வதி பிக் பாஸ் 9வது சீசனின் முக்கியமான ஒரு போட்டியாளராக இருப்பார் எனச் சொல்லலாம். இகுக்கு வித் கோமாளி முதலான ஷோக்கள் இவருக்கு மேலும் புகழைத் தந்தன.. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் இவர்.
கமருதீன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சிலவற்றிலிருந்து யாராவது பிக் பாஸ் செல்வது வழக்கமாக நடப்பதுதான். இந்த சீசனில் அப்படிசெல்கிறவர்களின் எண்ணிக்கையைக் கொஞ்சம் குறைத்திருப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும் `மகாநதி’ தொடரில் நடித்து வந்த நடிகர் கமருதீன் ஒரு போட்டியாளராகச் செல்வதாகச் சொல்கிறார்கள்.

இவர்கள் தவிர சீரியல் நடிகர் சபரி, திருநங்கை ஒருவர், பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர், கடல் தொடர்பான வீடியோக்கள் வெளியிடும் யூ டியூபர் ஒருவர் என பலர் புதிய முகங்களாக களம் இறங்குகிறார்களாம்.
மேலும் இந்த சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரி இருக்காது எனவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. எனவே முதல் எண்ட்ரியிலேயே இருபது பேர் வரை செல்லலாமெனத் தெரிகிறது.
இவர்கள் தவிர வேறு யார் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என நீங்கள் நினைக்கும் நபர்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்