
மூன்று காலகட்டங்களில், 3 நிலப்பகுதிகளில் நடக்கும் காதல் கதையை மையமாகக் கொண்டு ‘அமரம்’ என்ற படம் உருவாகியுள்ளது. இதை திருஅருள்கிருஷ்ணன் இயக்கியுள்ளார். திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க, சி.ஆர்.ராஜன் தயாரித்துள்ளார்.
இதில் ராஜன் தேஜேஸ்வர், ஐராஅகர்வால் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். ஜார்ஜ், சாய் தீனா,நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெரேடி, வாசுதேவன் முரளி உள்படபலர் நடித்துள்ளனர். மிக்கி ஜெ.மேயர் இசையமைத்துள்ளார். பரத்குமார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்தப் படம் பற்றி திரு அருள் கிருஷ்ணன் கூறும்போது, “இதுவரை திரையில் பார்த்திராத அதிரடி காட்சிகளுடன் ஆக் ஷன் விருந்தாக இந்தப்படம் இருக்கும். மிராக்கிள் மைக்கேல் புதுவிதமான பாணியில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இதுவரை சொல்லப்படாத, கிழக்கு காடு மக்களின் வாழ்க்கையை சொல்லும் இந்தப்படம், பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.