
இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி அதன் பிறகு மதிப்பை உருவாக்குவதில் உள்ளது என்று நம்புகிறது.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நிறுவனம் சமூகப் பொறுப்பைத் தனது முக்கிய நோக்கமாக ஏற்று மக்களின் வாழ்வை உயர்த்தவும், சமூகத்தைச் சக்திவாய்ந்ததாக மாற்றவும், அதன் செழிப்பை விரிவுபடுத்துகிறது.
ஜிஆர்டி யின் இந்த வளர்ச்சி பயணத்தில் மீண்டும் திருப்பிக் கொடுப்பது என்ற இந்த ஆழ்ந்த உறுதியும் கருணையும், நேர்மையும் கொண்டு சமூக சேவையில் தனது தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபடுவது அவர்களின் மைய நோக்கமாக வெளிப்படுகிறது.
இந்தக் கண்ணோட்டத்திற்கு இணங்க ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சேலத்தில் உள்ள அயோத்தி ஆர்ய வைஸ்ய அறக்கட்டளைக்கு 50,00,000 ரூபாயை நன்கொடையாக வழங்கி தனது ஆதரவை வழங்கியுள்ளது.
இந்நிறுவனத்தின் இந்த முயற்சி அறக்கட்டளைக்கு அன்னதானம் வழங்கவும். சத்திரம் கட்டி உதவி தேவைப்படும் மக்களுக்குக் குறைந்த விலையில் தங்குமிடத்தை உறுதி செய்யவும் உதவுகிறது. ஊட்டச்சத்து மற்றும் தங்குமிடம் இரண்டும் மிகவும் தேவைப்படுபவர்களுக்குச் சென்றடைவதைத் தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சி குறித்துப் பேசிய ஜிஆர்டி ஜுவல்லரஸின் நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர் ஆனந்த அனந்தபதமநாபன் அவர்கள், “ஜிஆர்டியில் சமூகத்திற்குச் சேவை செய்வதும், சமூகத்தின் பின்தங்கிய மக்களைப் பராமரிப்பதும் நன்றியுணர்வின் உண்மையான வடிவம் என்று நாங்கள் நம்புகிறோம். மிகவும் தேவையுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கும் முயற்சிகளை ஆதரிக்கும் ஒரு நோக்கத்திற்கு நன்கொடை வழங்கி பங்களிப்பதில் நாங்கள் நன்றியை உணர்கிறோம்” என்று கூறினார்.