
சென்னை: “கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக இன்று காலை ராமநாதபுரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கரூர் பிரச்சினையில், அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா எனப் பார்க்கிறார்கள் என்று பாஜகவையும், ஊர் ஊராக சென்று தங்கள் கூட்டணி யாராவது வருவார்களா என பழனிசாமி பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று அதிமுகவையும் விமர்சித்திருந்தார்.