• October 3, 2025
  • NewsEditor
  • 0

தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஊருக்குப் போக வேண்டும் ட்ரெயின் டிக்கெட் என்றைக்கு ஓப்பன் ஆகிறது எனத் தேடிப் பிடித்து டிக்கெட் எல்லாம் எடுத்து முடித்த பின்னர் நினைவுக்கு வருவது பட்டாசு தான்.

காலையில் சத்தத்துடன் துவங்கும் வெடிகள் இரவு நேரங்களில் வண்ண வான வேடிக்கையாக மாறும் வரை அனைத்து வகையான பட்டாசுகளையும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும்.

தீபாவளி

பட்டாசு என சொன்னவுடன் நினைவுக்கு வருவது சிவகாசி தான் அங்கு சென்று அதையும் தேடிப் பிடித்து வாங்கிய பின்னர் தீபாவளியை குதூகலமாக, கொண்டாட்டமாக கொண்டாட தயாராகி விட்டோம்.

இப்படி இந்த வருடத்திற்கான பட்டாசு தயாரிப்புகள் அனைத்தும் முடிந்து தீபாவளி விற்பனை மிக ஜோராக நடைபெற்று வருகிறது.

பட்டாசை தாங்களே நேரில் சென்று வாங்க வேண்டும் என்பவர்கள் சிவகாசி நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

மற்றவர்கள் ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆர்டர் செய்து பார்சல்கள் மூலம் வாங்கிய வண்ணமும் இருக்கிறார்கள். இதனுடன் இந்த ஆண்டு பட்டாசு விலை உயர்வு இல்லாததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக பட்டாசுகளை வாங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

விற்பனைக்கு தயாராகிய பட்டாசுகள்

இதில் மொத்த தயாரிப்பில் 95 சதவீத உற்பத்தி நடைபெறுவது விருதுநகர் மாவட்டமாகும். குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் மட்டும் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் கீழ் 680 தொழிற்சாலைகளும், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிவின் கீழ் 400 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 1080 பட்டாசு ஆலை இயங்கி வருகின்றன.

இத்தொழிலை நம்பி நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் என மொத்தம் 8 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றன. இப்படி பல லட்சம் தொழிலாளர்கள் கைவண்ணத்தால் உருவான பட்டாசுகள் இன்னும் இருபதே நாளில் வெடிக்க தயாராக இருக்கிறது.

பசுமை பட்டாசு, பேரியம் நைட்ரேட் தடை, தொடர் பட்டாசு ஆலை விபத்து என பல நெருக்கடிகள் வந்தாலும் இந்த ஆண்டுக்கான 75 சதவிகித பட்டாசு தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டன.

இந்த ஆண்டு மொத்த வர்த்தகமாக ரூபாய் 8000 கோடிக்கு பட்டாசு தேவை இருக்கிறது. ஆனால் 6000 கோடி ரூபாய்க்கு மட்டுமே பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு தயாரிப்பு
பட்டாசு தயாரிப்பு

இருந்தும் எந்த ஒரு வினையெச்சமும் இல்லாததால் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சிவகாசி, சாத்தூர், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் போன்ற பகுதிகளில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இருந்து பட்டாசு வாங்குவதற்காக குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகளில் புது வரவுகளை எதிர்பார்க்கும் மக்கள் இந்த ஆண்டும் புது வரவுகளை எதிர்பார்க்கின்றனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பல பட்டாசு வகைகள் வந்துள்ளது. இன்னும் தீபாவளிக்கு ஓரிரு வாரங்களே இருப்பதால் வெளியூர்களுக்கு பட்டாசுகளை அனுப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *