
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.பி அனுராக் தாக்குர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம்: ‘கரூரில் சமீபத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோர் குறித்து ஆழ்ந்த கவலையுடனும் வேதனையுடனும் நான் எழுதுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு துயரச் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தது. மக்கள் மிகவும் வலியுடன் உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனதில் இந்தச் சம்பவத்துக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.