
பிரபல இந்தி பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறுஉருவாக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
பிரபல பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் பாடி இருக்கிறார்.
இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், பதினெட்டு மகாராஷ்டிர மாநில விருதுகள், சிறந்த பின்னணி பாடகிக்கான ஏழு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.
இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக திகழும் ஆஷா போஸ்லே 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார்.
இதனிடையே தனது குரலை AI மூலம் ஜெனரேட் செய்து விற்கப்படுவதாகக் குற்றம்சாட்டி ஆஷா போஸ்லே மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆஷா போஸ்லேவின் குரல், ஸ்டைல், பேச்சு, மற்றும் அவரது புகைப்படங்களைப் பயன்படுத்தி AI மூலம் மறு உருவாக்கம் செய்ய தடை விதித்திருக்கிறது.