
சிவகாசி: கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பட்டாசால் ஏற்படும் காற்று மாசுபாட்டைவிட நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவைதான் அதிக மாசு ஏற்படுத்தும். பெரிய முதலாளிகளை விட்டு விட்டு, சிவகாசி போன்ற சிறிய ஊரில் இருக்கும் சிறு முதலாளிகளின் பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.