
சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ‘ஒய்’ பிரிவு அதிகாரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு உளவுத் துறையின் அறிக்கை அடிப்படையில், எஸ்பிஜி, இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் என பல்வேறு வகையான பிரிவுகளின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்குகிறது.