
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் ஆயுத பூஜையையொட்டி புதன்கிழமையும், காந்தி ஜெயந்தியையொட்டி இன்று வியாழக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள். இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் பணி நாளாக இருந்தது. இதையடுத்து நாளையும் (அக்.3) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.