
கடந்த செப்டம்பர் 9-ம் தேதி, ‘ஹமாஸ் தலைமையைத் தாக்குகிறேன்’ என்று கத்தாரில் வான்வழித் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய கண்டனத்தை எழுப்பியது.
இதற்காக வெள்ளை மாளிகையில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலையில், கத்தார் பிரதமர் அல் தானியிடம் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் வெளியிட்டுள்ள ஆணை ஒன்றில்…
“கத்தார் பிராந்தியங்கள், இறையாண்மை, முக்கிய கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும், அமெரிக்காவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாக அமெரிக்கா கருதும்” என்று கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகளுக்கு நடுவே நடக்கும் பிரச்னைகளில் மத்தியஸ்தம் செய்வதில் கத்தார் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால், அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பெரும் பிரச்னையாக உலக நாடுகள் அனைத்தும் கருதியது.
இது ட்ரம்பிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் தான், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நெதன்யாகு – கத்தார் பிரதமர் போன்காலுக்கு ஏற்பாடு செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.