• October 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆ​யுத​பூஜையை முன்​னிட்டு சென்​னை​யில் நேற்று பூஜைப் பொருட்​களை வாங்​கு​வதற்​காக திரண்ட பொது​மக்​களால் கடைவீ​தி​கள் மற்​றும் முக்​கிய சந்​தைகள் களை​கட்​டின. நாடு முழு​வதும் இன்று ஆயுத​பூஜை கோலாகல​மாக கொண்டாடப்படுகிறது. இதையொட்​டி, சென்னை கோ​யம்​பேடு, பாரி​முனை, தியாக​ராய நகர், பெரம்​பூர், புரசை​வாக்​கம், வண்ணாரப்​பேட்டை உள்​ளிட்ட முக்​கிய சந்​தைகள் காலை முதலே பரபரப்​பாக காணப்​பட்​டது.

குறிப்​பாக, ஆயுத பூஜையை முன்​னிட்டு கோயம்​பேட்​டில் அக்​.5-ம் தேதி வரை சிறப்பு சந்தை நடை​பெறுகிறது. இதில் பொறி, கடலை, வாழைப்​பழம், இலை, தேங்​காய், பழங்​கள் உள்​ளிட்ட பூஜை பொருட்​களை விற்​பனை செய்ய தனி​யாக ஓர் இடம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இங்​கும் அமோக​மாக விற்​பனை நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *