
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. இந்த உத்தரவை மத்திய மண்டல காவல் துறையின் தலைவர் ஜோஷி நிர்மல் குமார் பிறப்பித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கரூர் நகர போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.