
தென்னிந்தியப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், 30-40 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசும் எனவும் எச்சரித்திருக்கிறது. புதுச்சேரி – காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.