• October 1, 2025
  • NewsEditor
  • 0

தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் மோகன் லாலுக்கு அக். 4-ம் தேதி பிர​மாண்ட பாராட்டு விழா நடத்​தப்​படும் என கேரள அரசு அறி​வித்​துள்​ளது. நடிகர் மோகன் லாலுக்கு திரைத்​துறை​யின் உயரிய விரு​தான தாதா சாகேப் பால்கே விருது செப்​.23-ம் தேதி வழங்​கப்​பட்​டது. இதையடுத்து மோகன் லாலை கவுரவிக்​கும் வித​மாக கேரள அரசின் சார்​பில் அக். 4-ம் தேதி ‘மலை​யாளம் வனோலம், லால் சலாம்’ எனும் பெயரில் பாராட்டு விழா நடை​பெற இருக்​கிறது. இதைக் கேரள கலாச்​சா​ரத்​துறை அமைச்​சர் சாஜி செரியன் தெரி​வித்​தார்.

திரு​வனந்​த​புரத்​தில் உள்ள சென்ட்​ரல் மைதானத்​தில் நடை​பெறும் இவ்​விழா​வில், கேரள முதல்​வர் பின​ராயி விஜயன் மற்​றும் முக்​கிய அமைச்​சர்​கள் பங்​கேற்​கின்​றனர். இந்த நிகழ்​வுக்​கான லோகோ வெளி​யிடப்​பட்​டுள்​ளது. “மலை​யாள சினி​மாவுக்கு நடிகர் மோகன் லால் கடந்த 50 ஆண்​டு​களாகச் சிறப்​பான பங்​களிப்​பைச் செய்​துள்​ளார்” என்று அமைச்​சர் சாஜி செரியன் கூறி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *