
சென்னை: ஒரு கட்சித் தலைவர் ஆறுதல்கூட சொல்லாமல் தனது பாதுகாப்பை மட்டும் நினைத்து பயந்து சென்றதை இதுவரை பார்த்ததில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் ஆர்ஜூனா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆ.ராசா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்ததுடன், தற்போதும் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசியல் மனமாச்சாரியங்களைத் தாண்டி முதல்வர் ஸ்டாலின் உடனே கரூர் சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததுடன் நிவாரணமும் வழங்கச் செய்தார்.