• October 1, 2025
  • NewsEditor
  • 0

இட்லி கடை (தமிழ்)

இட்லி கடை

தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் ‘இட்லி கடை’ படம் இன்று (அக்டோபர் 1) திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருக்கின்றனர்.

சாதாரண கிராமத்தில் பிறந்து பெரிய ஸ்டார் ஹோட்டலில் செஃப்பாக இருக்கும் தனுஷ், மீண்டும் தனக்கு ஆத்மார்த்தமாக இருக்கும் அப்பாவின் இட்லி கடை தொழிலை தொடங்கி தடைகளைத் தாண்டி முன்னேறுவதுதான் இதன் கதைக்களம்.

Kantara: A Legend Chapter-1

Kantara Chapter 1
Kantara Chapter 1

2022-ம் ஆண்டு ‘காந்தாரா’ படத்திற்குக் கிடைத்த நாடுதழுவிய வரவேற்பையும், வசூலையும் அள்ளியது. இப்போது முந்தையப் படத்தைவிடவும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் பெரிய பட்ஜெட்டில், பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி (வியாழக்கிழமை) திரைக்கு வருகிறது.

Sunny Sanskari Ki Tulsi Kumari (இந்தி)

Sunny Sanskari Ki Tulsi Kumari
Sunny Sanskari Ki Tulsi Kumari

ஷஷாங் கைதன் இயக்கத்தில் வருண் தவான், ஜான்வி கபூர், சான்யா மல்கோத்ரா, ரோஹித் ஷரப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sunny Sanskari Ki Tulsi Kumari’. காமெடி ரொமாண்டிக் திரைப்படமான இது அக்டோபர் 2ஆம் தேதி (வியாழக்கிழமை) திரைக்கு வருகிறது.

ஓடிடி ரிலீஸ்

மதராஸி (தமிழ்)

மதராஸி
மதராஸி

Madharaasi Review: ஆக்‌ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியானது ‘மதராஸி’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இப்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Little Hearts (தெலுங்கு)

Little Hearts
Little Hearts

சாய் மார்த்தாண்ட் இயக்கத்தில் மௌலி, தனுஜ் பிரசாந்த், ஷிவானி, ராஜீவ் கனகலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘Little Hearts’ படத்தின் Extended Version இப்போது ‘E tvwin’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Maine pyar kiya (மலையாளம்)

Maine pyar kiy
Maine pyar kiy

பைசல் ஃபாசிலுதீன் இயக்கத்தில் ஹிரிது ஹரூன், ஜெகதீஸ் மற்றும் நடிகை ப்ரைட்டி முகுந்தனின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Maine pyar kiya’. காதல் அரட்டைகள், நட்பு அதன் பிரச்னைகள் உள்ளிட்டவற்றை ஜாலியாகப் பேசும் இத்திரைப்படம் ‘Simply South’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *