• October 1, 2025
  • NewsEditor
  • 0

ஜிஎஸ்டி விலைக் குறைப்பால்… கார் பைக்குகளின் விலை மகிழ்ச்சி அளிக்கும் அளவிற்குக் குறைந்திருக்கின்றன. மின்சாரக் கார்களின் வரியில் மாற்றம் இல்லை என்றாலும்… உதிரிபாகங்களின் விலை குறைந்திருப்பதால், இவற்றுக்கும் சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. பண்டிகைக் காலம் துவங்கிவிட்டதால்… கார்/பைக்குகள் தாண்டி ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் பல பொருட்களின் விலைகளும் குறைந்திருக்கின்றன. இன்னொருபுறம் பண்டிகைக் கால போனஸும் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் மக்களின் கைகளில் உபரியாகப் பணம் மிஞ்சப்போகிறது. இதெல்லாம் மக்களை கார் மற்றும் பைக் ஷோரும்களை நோக்கி நகர்த்துவதைப் பார்க்க முடிகிறது. புதிய ஜிஎஸ்டி வரிவிகிதம் அமலுக்கு வந்த செப்டம்பர் 22-ம் தேதி கார் மற்றும் பைக் ஷோரூம்களில் திருவிழாக் கணக்காக மக்கள் குவிந்தார்கள். இந்த வரிக் குறைப்பால என்னென்ன கார்களின்/பைக்குகளில் விலை எவ்வளவு குறைந்திருக்கிறது என்று விரிவாக இந்த இதழில் அலசியிருக்கிறோம்.

இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க மேலும் பல புதிய மாடல் கார்களும், பைக்குகளும் ஸ்கூட்டர்களும் அறிமுகமாகி வருகின்றன. ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் பல கார்களும் ஃபேஸ்லிஃப்ட்டாக மறு அறிமுகமாகின்றன. இன்னொருபுறம் மாருதி சூஸூகியின் டிசையரும், விக்டோரிஸும் பாதுகாப்புக்காக வழங்கப்படும் GNCAP மற்றும் BNCAP-ல் ஐந்து நட்சத்திரங்கள் வாங்கி இருக்கின்றன.

ஆக, பக்கத்து வீட்டுக்காரர் வைத்திருக்கிறார்; எதிர் வீட்டுக்காரர் வைத்திருக்கிறார் என்று அவசரப்பட்டு காரை வாங்காமல், நின்று நிதானித்து நமக்கு என்ன மாதிரி கார் தேவை; அதில் என்ன மாதிரி வசதிகள் இருக்க வேண்டும்; நம் பட்ஜெட்டில் எந்தக் கார்கள் வரும்… என்பதை அலசி ஆராய்ந்து நிதானமாக கார்/பைக்/ஸ்கூட்டர் வாங்க கார் மேளாவும், பைக் பஜாரும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

– ஆசிரியர்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *