
திருச்சி: ‘டெட் விவகாரத்தில் பள்ளி கல்வித் துறை, தமிழக அரசு சார்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம். நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “செப்டம்பர் 1-ம் தேதி டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம் என்று தீர்ப்பு வந்தது. இது அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.