• September 30, 2025
  • NewsEditor
  • 0

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் கூட நெரிசலில் சிக்கு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஏ.டி.ஜி.பி டேவிட்சன், மருத்துவத்துறை செயலாளர் ஆகியோர் சென்னையில் விளக்களித்தனர்.

செய்தியார்களிடம் பேசிய தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ், “அவர்கள் (த.வெ.க) முதலில் தங்களின் கடிதத்தில் 7 இடங்களைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

25-ம் தேதி வேலுச்சாமிபுரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் நடத்திய கூட்டத்தில் 10 முதல் 15 ஆயிரம் பேர் எந்தச் சிரமுமின்றி கூடியதால், அந்த இடத்தைத் தருமாறு 26-ம் தேதி கட்சி சார்பில் போலீஸுக்குக் கடிதம் கொடுத்தார்கள்.

அமுதா ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் – தமிழ்நாடு அரசு

முதலில் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியைக் கேட்டிருந்தார்கள். அதற்கருகில் அமராவதி பாலம் இருந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டால் ஏதாவது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது என போலீஸ் அனுமதி மறுத்தார்கள்.

அடுத்து உழவர் சந்தை கேட்டிருந்தார்கள். அப்பகுதியில் சாலை அகலமே 30 – 40 அடி இருக்கும். வேலுச்சாமிபுரம் தேசிய நெடுஞ்சாலை 60 அடிக்கு மேல் அகலம்.

இரு பக்கமும் போகக்கூடிய வாய்ப்பிருப்பதால் இறுதியாக இந்த இடம் ஒதுக்கப்பட்டது.

அதையடுத்து, கூட்டத்துக்கு 10,000 பேர் வருவார்கள் என்று அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இருப்பினும், அவர்கள் சொல்லும் கூட்டத்தை விட அதிகமாக 20,000 பேர் வருவார்கள் என போலீஸார் தயாராகினர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த 10,000 பேருக்கு 500 போலீஸார் ஒதுக்கப்பட்டது. 3 மணிமுதல் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

6 மணியளவில் 20,000 பேர் கூடிவிட்டார்கள். கூடுதலாக கட்சித் தலைவர் கூடவே நிறைய பேர் வந்தார்கள். அதனால் கூட்டம் 25,000-க்கும் மேல் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல், மின்சார வாரியம் சார்பில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

அமுதா ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் - தமிழ்நாடு அரசு
அமுதா ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் – தமிழ்நாடு அரசு

அவரைத்தொடர்ந்து பேசிய ஏ.டி.ஜி.பி டேவிட்சன், “பொதுவாக 50 பேருக்கு ஒரு போலீஸ் அதிகாரி ஒதுக்குவது வழக்கம்.

இங்கு 20 பேருக்கு ஒரு போலீஸ் அதிகாரி ஒதுக்கப்பட்டது. பிரசார இடத்துக்கு 50 மீட்டருக்கு முன்னால் கூட்டம் அதிகமாகும்போது, இதற்கு மேல் செல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி கூறினார்.

ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.

மேலும், மருத்துவத்துறை செயலாளர், “கரூரில் 108 ஆம்புலன்ஸுகள் 19 இருக்கின்றன. அவற்றில், சம்பவம் நடந்த பகுதியில் மூன்று பகுதிகளில் ஆம்புலன்ஸ் இருந்தன.

சற்று தூரத்தில் மேலும் 3 ஆம்புலன்ஸுகள் இருந்தன. 07:14 மணிக்கு 108 சேவைக்கு முதல் அழைப்பு வந்தது. 07:20-க்கு அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் சென்றது.

இரண்டாவது அழைப்பு 07:14 வந்தது 07:23-க்கு அங்கு ஆம்புலன்ஸ் சென்றது.

இதுதவிர கட்சி சார்பாக 2 ஆம்புலன்ஸுகள் பிரசார வாகனத்துடன் வந்தன. மேலும் 5 ஆம்புலன்ஸுகள் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால், அங்கிருந்து வெளியே வந்தது 50 ஆம்புலன்ஸுகள். இதில், 7 கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது, 108 ஆம்புலன்ஸுகள் 6, மற்றவை, சம்பவம் நடந்த பிறகு அப்பகுதி போலீஸ் ஸ்டேஷன் மூலமாக தனியார் மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டவை” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *